கொத்தடிமையாக வேலை பார்த்த தாய் மற்றும் 3 குழந்தைகள்...  தப்பி வந்த தாய் ஆட்சியர் அலுவலத்தில் தஞ்சம்...

சேலத்தில் வெள்ளி பட்டறையில் கொத்தடிமையாக வேலை பார்க்கும் குழந்தைகளை மீட்டுத் தரக்கோரி, தப்பி வந்த தாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொத்தடிமையாக வேலை பார்த்த தாய் மற்றும் 3 குழந்தைகள்...  தப்பி வந்த தாய் ஆட்சியர் அலுவலத்தில் தஞ்சம்...

சேலம் வின்சென்ட் பகுதியை சேர்ந்தவர் கீதா. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.இந்நிலையில் இவரது கணவர் ரகுபதி திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சயனைடு கணேசன் என்பவரிடம் வெள்ளிக்கொலுசு தயாரிப்பு பட்டறையில்  மாத சம்பளத்திற்கு  வேலை பார்த்து வந்து நிலையில் கணேசனிடம் ஒரு லட்சத்து 25ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொலுசு பட்டரையில் வெள்ளி பொருள்களை திருடியதாக கணேசன் புகார் அளித்தை தொடர்ந்து மன உளைச்சல் காரணமாக ரகுபதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து ரகுபதி வாங்கிய கடனை அடைக்கும் படி ரகுபதியின் மனைவி கீதாவையும், மூன்று குழந்தைகளை கொத்தடிமைகளாக வேலை வாங்கியதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கணேசனிடமிருந்து கீதா அவரது ஆறு வயது மகனுடன் தப்பி வந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளார். மேலும் கொத்தடிமைகளாக வேலை செய்துவரும் தனது மகள் மற்றும் மகனை மீட்டுத் தரக்கோரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.