''ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த நடவடிக்கை'' - அமைச்சர் மனோ தங்கராஜ்.

" அமுல் நிறுவனத்தை பார்த்து ஆவின் அச்சப்பட தேவையில்லை."

''ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த நடவடிக்கை'' - அமைச்சர் மனோ தங்கராஜ்.

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கோடைகாலம் என்பதால் பால் விநியோகம் தாமதமாகிறது விரைவில் அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்படும் எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

மதுரை சாத்தமங்கலத்தில் உள்ள ஆவின் ஐஸ்கிரீம் தொழிற்சாலை மற்றும் ஆவின் உற்பத்தி ஆலையின் செயல்பாடுகள் குறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார். உடன் ஆவின் நிர்வாக இயக்குனர் வினித், ஆட்சியர் சங்கீதா, மேலாளர் சாந்தி ஆகியோர் பங்கேற்றனர். ஆய்வை தொடர்ந்து விவசாயிகளுக்கு ரூ.55 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்:-

பால் உற்பத்தியை பெருக்கவும், உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும், மக்களுக்கு பால் பொருட்கள் தரமாக கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். மேலும், பால்  உற்பத்தியை பெருக்குவதற்கு 40 லட்சம் மதிப்பிலான கறவை மாட்டுகான கடன், பசு தீவனம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருவதாகவும்,  ஆவின் நிறுவனத்தை இன்னும் மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது எட்ன்றும் தெரிவித்தார்.  

தொடர்ந்து,  இந்திய அளவிலேயே பால் உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொள்முதல், உற்பத்தி நடைமுறைகளில் நிலவும் பிரச்சனைகளை சரி செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். மேலும், தற்போது 45 லட்சம் லிட்டர் கையாளும் திறன் உள்ள நிலையில், அதனை 60 லட்சமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றும், முதலமைச்சரிடம் ஆலோசித்து நிச்சயமாக விலை உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமுல் நிறுவனத்தை பார்த்து ஆவின் அச்சப்பட தேவையில்லை என்றும்  உறுதியளித்தார்.

சலசலப்புகளுக்கு பால் உற்பத்தியாளர்கள் அஞ்ச வேண்டாம்..! கோரிக்கையை  நிறைவேற்றும் பணி தொடங்கியாச்சு- மனோ தங்கராஜ்

மேலும், இது கோரைக்காலம் என்பதால் பால் தட்டுப்பாடு ஏற்படுவது இயல்பு என்றும்,  அதனால் தான் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் பால் விநியோகம் தாமதம் ஆகிறது என்றும்,   விரைவில் அனைத்து பிரச்னைகளும் இல்லாத அளவுக்கு; எந்த குற்றச்சாட்டையும் இல்லாத அளவுக்கு நிர்வாகத்தை சிறப்பாக நடத்துவோம்" என்றார்.

 இதையும் படிக்க     | அண்ணாமலையின் கருத்திற்கு பதிலடி கொடுத்த டிடிவி தினகரன்!