அல்லு சில்லுகளுக்கு பதில் சொல்வதைத் தவிர்த்து தேசிய அரசியலில் கவனம் செலுத்துங்க - முதல்வருக்கு திருமா கோரிக்கை...

வியூகம் அமைப்பதில் ஸ்டாலின் கலைஞரை போல் செயல்பட வேண்டும் என்று திருமாவளவன் பேசியுள்ளார்.

அல்லு சில்லுகளுக்கு   பதில் சொல்வதைத் தவிர்த்து தேசிய அரசியலில் கவனம் செலுத்துங்க - முதல்வருக்கு திருமா கோரிக்கை...

விடுதலை சிறுத்தைகள் கட் சியின் விருதுகள் வழங்கும் விழா 2021 சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடை பெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருது, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோவிற்கு பெரியார் ஒளி, பேச்சாளர் நெல்லை கண்ணனுக்கு காமராஜர் கதிர், பி.வி.கரியமாலுக்கு அயோத்திதாசன் ஆதவன் விருது, பஷிர் அகமதுக்கு காயிதே மில்லத் பிறை விருதும், மொழியிலாளர் இராமசாமிக்கு செம்மொழி ஞாயிறு விருதும் வழங்கப்பட்டது.

நிகழ்ச் சியில் பே சிய வி. சி.க. தலைவர் திருமாவளவன் கூறியதாவது :

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள். எங்களுக்கும் வி. சி.க. விற்குமான உறவு கொள்கை ரீதியான உறவு என்றார். திமுகவுடன் நின்றால் தான் பிற்போக்கு சக்திகளை முறியடிக்கமுடியும். அகில இந்திய அளவில் பாஜகவிற்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்கூடிய ஆற்றல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் உள்ளது.

அடுத்த முறை பாஜக வந்தால் நாட்டை காப்பாற்ற முடியாது தமிழகத்திற்கும் இது நல்லதல்ல. அல்லு சில்லுகளை பற்றி கவலைகொள்ளாமல் அற்பர்களை பற்றி கவலைக்கொள்ளாமல் அகில இந்திய அளவில் நீங்கள் கவனம் கொள்ளவேண்டும். காங்கிரஸ் இல்லாத ஒரு அணியை நாம் கட்டினால் அது பாஜகவிற்கு சாதகமாக முடியும். உங்களை குறைத்து மதிப்பீட்டவர்களை பேரிடியாக தேர்தல் வெற்றி மூலம் பதில் அளித்தவர் முதல்வர்.

பெரியார் மடியில் விளையாட, அண்ணாவின் அரவணைப்பில் இருக்க வாய்ப்பு உங்களுக்கு கிடைத்து. வியூகம் அமைப்பதில் கலைஞரை போல் நீங்கள் செயல்படவேண்டும். திமுகவுடன் என்றும் நாங்கள் தோள் கொடுத்து நிற்போம் என்றார்.