எனது சகோதரி இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார்.... அதிமுக உறுப்பினர் தங்கமணி!!!

எனது சகோதரி இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார்.... அதிமுக உறுப்பினர் தங்கமணி!!!

சகோதரியின் இறப்பை குறிப்பிட்டு தழுதழுத்த குரலில் அதிமுக உறுப்பினர் தங்கமணி பேசியுள்ளார்.

பாதுகாக்க வேண்டும்:

சட்டப்பேரவையில், தொழிற்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளில் சாயப்பட்டறை தவிர்க்க முடியாத தொழிலாக உள்ளதாகவும், இங்கு சாயப்பட்டறை கழிவுகள் ஆற்றில் கலப்பதால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு வழங்க வேண்டும், பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

சகோதரியும்:

குறிப்பாக, புற்று நோயினால் இறப்புகள் அதிகம் ஏற்படுவதாக கூறிய அவர், 15 நாள் முன்பு கூட எனது சகோதரி இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இறந்ததாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.  இதை அவர் கூறும்போது குரல் தழுதழுத்து கண்ணீர் மல்க பேசினார்.

அரசே ஏற்று..:

பொது சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து  அரசே ஏற்று நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், சாயப்பட்டறைகளையும் அரசே நடத்தினால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் எனவும், பத்து இறப்புகளில், ஒரு இறப்பு புற்று நோயினால் ஏற்படுவதாகவும், எனவே அரசு மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க:   புதிதாக தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்க தேவையில்லை... அமைச்சர் கணேசன்!!