சென்னையில் தயார் நிலையில் நீட் தேர்வு மையங்கள்- நகை, கைகடிகாரம், கால்குலேட்டர் உள்ளிட்டவைகளுக்கு தடை

நாடு முழுவதும் நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் சென்னையில் உள்ள நீட் தேர்வு மையங்கள் அனைத்தும்  தயார் நிலையில்  வைக்கப்பட்டுள்ளன. 

சென்னையில் தயார் நிலையில் நீட் தேர்வு மையங்கள்- நகை, கைகடிகாரம், கால்குலேட்டர் உள்ளிட்டவைகளுக்கு தடை

கொரோனா விதிமுறைகளை பின்பற்றும் விதமாக மாணவர்களுக்கு தனி நபர் இடைவெளிக்கான வட்டம் வரையப்பட்டு பள்ளி வாளகத்தில் கிருமி நாசினி மற்றும் வெப்பமானிகள் வைக்கப்பட்டு தேர்வர்களின் பெயர் மற்றும் தேர்வுக் கூட விவரங்கள் பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளன. 

தேர்வறைக்குள் கால்குலேட்டர்  உணவுப் பொருட்கள் , வாலட்கள் , நொறுக்குத் தீனிகள் உள்ளிட்டவற்றை எடுத்து வர அனுமதி கிடையாது  என்றும் நகைகள் ,கைக்கடிகாரம் ,  கூலிங் கிளாஸ் வகை கண்ணாடிகளை அணிந்துவரக் கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகள் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டுள்ளன.

மேலும் பேனா உள்ளிட்ட எழுதுகோல்கள் எடுத்து செல்ல மாணவர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில் ஹால் டிக்கெட் , அடையாள அட்டை , புகைப்படம் மட்டுமே தேர்வு அறைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர் என்கிற விவரமும் ஒட்டப்பட்டுள்ளன.

மேலும், பேனா , முகக்கவசம் எடுத்து செல்ல அனுமதி இல்லை. தேர்வறையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அதேபோல, தேர்வு நடைபெறும் மையங்கள் இன்று முதல் மூன்று நாட்கள் தேசிய தேர்வு ஆணைய முகமையின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

தமிழகம் முழுவதும் 1லட்சத்து 12 ஆயிரத்து 889 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ள நிலையில் சென்னை மண்டலத்தில்  33 மையங்களில் 17, 996 மாணவர்கள் நாளை நீட் தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.