அரசுப்பள்ளிகளில் தொடரும் நீட் பயிற்சி: திமுக சொன்னது என்ன ஆச்சு?

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சி தொடர்ந்து வழங்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..

அரசுப்பள்ளிகளில் தொடரும் நீட் பயிற்சி: திமுக சொன்னது என்ன ஆச்சு?

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சி தொடர்ந்து வழங்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..
 
சென்னை தலைமை செயலாகத்தில்  செய்தியாளர்களை சந்தித்த அவர்,  அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட்  பயிற்சி வழங்குவதில் குழப்பம் நிலவுவதாக எதிர்க்கட்சித் துணை தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் , நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் நடவடிக்கையில் அரசு உறுதியாக உள்ளதாகவும் கூறினார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சி தொடர்ந்து வழங்கப்படும் என கூறிய அவர்,  நீட் தேர்வு தாக்கம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், நான்கு முறை குழு  கூடி ஆலோசனை மேற்கொண்டு கருத்துக்களைப் பெற்று வருவதாகவும் அக் குழுவின் அறிக்கை அடிப்படையில் தமிழக அரசு  நீட் தேர்வில் இருந்து  விலக்கு பெறும் நடவடிக்கையில் ஈடுபடும் என்று அவர் கூறினார்..

தொடர்ந்து பேசிய அவர், கொரோனா மூன்றாவது அலையை  எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாகவும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

கருப்பூஞ்சை நோய்க்கு தேவையான தடுப்பு மருந்துகள்  கையிருப்பில் உள்ளதாக கூறிய அவர், கொரோனா மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசிற்கு இல்லை என்றும் திட்டவட்டமாக கூறினார்.

11 மாவட்டங்களில் பொதுமக்களின் ஒத்துழைப்பும், மருத்துவர்களின்  சிகிச்சையாலும் கொரோனா தொற்று மிக வேகமாக குறைந்துள்ளதாக கூறிய அவர், கிங்க்ஸ் மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவு, ஓமந்தூரார் மருத்துவமனையை மாற்றம் செய்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.