நாங்குநேரி கொடூரம்; நீதியரசர் சந்துரு தலைமையில்  விசாரணைக் குழு!

நாங்குநேரி கொடூரம்; நீதியரசர் சந்துரு தலைமையில்  விசாரணைக் குழு!

நாங்குநேரியில் பட்டிலின சமூக மாணவன் தாக்கப்பட்ட விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த நீதியரசர் சந்துரு தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரியில் பட்டிலின சமூக மாணவன் பிற சமூகத்தை சேர்ந்த மாணவர்களால் கடந்த 9 ஆம் தேதி வெட்டப்பட்டார். இச்சம்பவம் தமிழ்நாடெங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதையடுத்து  அந்த மாணவரும் அவரது தங்கையும்  நெல்லை பல்நோக்கு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு உள்ளிட்ட பலர் மாணவன் மற்றும் அவரது தங்கையை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இதுத் தொடர்பாக தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சாதி இன உணர்வு பரவி இருப்பது எதிர்கால தமிழ்நாட்டின் நலனுக்கு நல்லதல்ல என் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய முக்கியப் பிரச்சினை என்பதால், இதில் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சாதி இன பிரிவினைகள் இல்லாத சூழ்நிலையை உருவாக்கவும் அரசுக்கு ஆலோசனை வழங்கிட நீதியரசர் சந்துரு தலைமையிலன குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:”நாங்குநேரி சம்பவம் மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது” தமிழிசை செளந்தர்ராஜன்!