மக்கள் தொகை அடிப்படையில் கூடுதல் தடுப்பூசி வேண்டும்… மத்திக்கு கடிதம்  

தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்யுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மன்டவியாவிற்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகம் முழுவதும் குறித்த நேரத்திற்குள்ளாக கூடுதல் தடுப்பூசிகளை செலுத்திட சுகாதாரத்துறை திட்டமிட்டிருப்பதாகவும், இதனை கருத்தில் கொண்டு மக்கள்தொகை அடிப்படையில் கூடுதல் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாள்தோறும் சராசரியாக 5 லட்சம் வீதம் வாரத்திற்கு 50 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்தில் தற்போது செலுத்தப்பட்டு வரும் நிலையில், கடந்த 12ம் தேதி மட்டும் ஒரே நாளில் மெகா தடுப்பூசி முகாம் வாயிலாக 28 லட்சத்து 91 ஆயிரம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். வரும் நாட்களில் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் விதமாக உள்ளதால் தமிழகத்திற்கு கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்யுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.