வனத்துறை சார்பில் புதிய அறிவிப்புகள்..! விவரம் உள்ளே!!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், வனத்துறை சார்பில் 12 புதிய அறிவிப்புகளை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வெளியிட்டார்.

வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாத்தில் பேசிய அவர், வனவிலங்குகளுக்கான அவசர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு தேவைகளுக்கென்று கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் திருச்சி மாவட்டங்களில் மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும்.,வன உயிரினங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கான நிவாரணத் தொகை உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ள நிலையில், அதற்கென 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் தென்மாவட்ட யானைகள் வாழ்விடங்களை பாதுகாக்கும் பொருட்டு அகத்தியர் மலையில் யானைகள் காப்பகம் ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர்  குறிப்பிட்டார்.

மேலும், தமிழ்நாடு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருத்திய ஊதியம் வழங்குதல் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என்றும்., மாநில அளவில் திட்டமிடப்பட்ட வன உயிரின குற்றங்களைக் கண்டறிந்து தடுக்க, வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாடு பிரிவு ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.