2023 புத்தாண்டை கொண்டாடுவதற்கு புதிய கட்டுபாடுகள் - எந்தமாதிரியான கட்டுபாடுகள் இருக்கும்!!!!

பொதுமக்கள் பாதுகாப்புடன் புத்தாண்டை கொண்டாடும் வகையில் காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள்

2023 புத்தாண்டை  கொண்டாடுவதற்கு புதிய கட்டுபாடுகள் - எந்தமாதிரியான கட்டுபாடுகள் இருக்கும்!!!!

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்  கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு

சென்னையில் 20,000-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை ஈடுபடுத்தவுள்ளனர்.

மது போதையில் வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பைக் ரேஸ் போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோர் மீது கைது நடவடிக்கை - வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு தடையில்லை - காவல்துறை அறிவிப்பு

மெரினாவில் காமராஜர் சிலை முதல், லைட் ஹவுஸ் வரை வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை.

NewYear, TNPolice, NewYearCelebration

எலியட்ஸ் பீச் பகுதியிலும் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை; கடற்கரைகள் ட்ரோன் மூலம் கண்காணிப்பு.

கோயில்கள், தேவாலயங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்

ஹோட்டல்களில் பாதுகாப்பு கருதி, 80 சதவீதம் மக்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்  

மதுபோதையில் உள்ளவர்களை ஹோட்டலுக்குள் அனுமதிக்கக் கூடாது; பார்ட்டி நடக்கக் கூடிய இடங்களில் சிசிடிவி கட்டாயம்

விபத்தில்லாத, உயிரிழப்புகள் இல்லாத புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள் விடுத்தும் சென்னை மாநகர் காவல் ஆணையர் அறிவித்தார்.