சென்னை மக்களுக்கு எச்சரிக்கை... புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பில் முதலிடம்... 

சென்னையில் புதிய வகை கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை மக்களுக்கு எச்சரிக்கை... புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பில் முதலிடம்... 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நேற்று 607 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  புதிய பாதிப்புகளில் தொடர்ந்து சென்னை முதலிடத்தில் உள்ளது. 

சென்னையில் நேற்றுமுன்தினம் 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 145 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 92 பேருக்கும், ஈரோட்டில் 45 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 42 ஆயிரத்து 224 ஆக அதிகரித்துள்ளது.

அதேசமயம் நேற்று ஒரே நாளில் 689 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 98 ஆயிரத்து 628 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 707 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆறாயிரத்து 889 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.