புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்றம்.. முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் ராமச்சந்திரன்!!

உதகையில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்றம்.. முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் ராமச்சந்திரன்!!

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள காக்கா தோப்பு பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

தமிழக அரசால் கட்டப்பட்டு வரும் இந்த மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டடம் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. நீதிபதிகளுக்கு என பிரத்யேக அறைகள், வழக்கறிஞர்களுக்கான அறைகள் என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நீதிமன்றத்தின் திறப்பு விழா வருகின்ற 2-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், முன்னேற்பாடு பணிகளை, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன். அதிகாரிகளுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.