மரம் முழுவதும் பூத்துக் குலுங்கும் நீலகிரி மலர்கள்... சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பு

கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் நீலகிரி மலர்கள் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. 

மரம் முழுவதும் பூத்துக் குலுங்கும் நீலகிரி மலர்கள்... சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோடை வசந்த காலம், சுற்றுலாப் பயணிகளை வர்ந்திழுக்கும். இந்த காலத்தில், மரங்களில் உள்ள இலைகள் எல்லாம் உதிரிர்ந்து, பல வண்ணங்களில் மலர்கள் பூத்துக் குலுங்குவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

அந்த வகையில், கோடை வசந்த காலம் துவங்குவதன் அறிகுறியாக மலைப்பகுதிகளில் நீலகிரி மலர்கள் தற்போது, பூத்து குலுங்கத் துவங்கியுள்ள. பெருமாள்மலை, வடகவுஞ்சி, ஊத்து உள்ளிட்ட வெப்பம் அதிகமுள்ள கீழ்மலைப்பகுதிகளில் இந்த மரங்களின் இலைகள் முழுவதும் உதிர்ந்து, மரம் முழுவதும் நீல வண்ண மலர்கள் பூத்து குலுங்குவது காண்போரை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த மலர்கள் இன்னும் சில மாதங்கள் வரை பூத்துக் குலுங்கும் தன்மை உள்ளதால், சுற்றுலாப் பயணிகளை கவரும் என்பதில் ஐயமில்லை.