கோடை காலத்தில் மின் பற்றாக்குறை இல்லாத அளவிற்கு முன்னெச்சரிக்கை.. அமைச்சர் செந்தில் பாலாஜி

கோடை காலத்தில் மின் பற்றாக்குறை இல்லாத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

கோடை காலத்தில் மின் பற்றாக்குறை இல்லாத அளவிற்கு முன்னெச்சரிக்கை.. அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 4 மாத காலத்தில் 7ஆயிரத்திற்கும் அதிகமான மின் மாற்றிகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் . மீதமுள்ள 1,072 மின் மாற்றிகள் விரைவில் மாற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் பணி நிறைவேற்றப்படும் என்று கூறிய அவர், அறிவிக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக செயல்படுத்தி  வருவதாக குறிப்பிட்டார்.

மின் கட்டணங்களை பொறுத்தவரை எந்தவித ஜி. எஸ்.டியும் வசூலிக்கப்படவில்லை என்றும், கடந்த ஆட்சியில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளே பின்பற்றப்பட்டு வருவதாகவும் செந்தில் பாலாஜி  விளக்கம் அளித்தார்.