சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு இருக்காம்... வீடுகளுக்கு இல்லையாம்...!

சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு இருக்காம்... வீடுகளுக்கு இல்லையாம்...!

வீடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வில் எவ்வித மாற்றமும் இல்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அரசு விழா பணிகளை நேரில் பார்வையிட்ட செந்தில் பாலாஜி:

கோவை அருகே உள்ள ஈச்சனாரி பகுதியில் நாளை நடைபெறவுள்ள அரசு விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதனை மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டார். 

மின் கட்டண விலையை குறைப்பதற்கான கோரிக்கை:

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள இழப்புகளால் மின்கட்டணம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த மின் கட்டண உயர்வு குறித்து சிறு குறு நடுத்தர தொழில் முனைவோர்கள் மின் கட்டண விலையை குறைப்பதற்கான கோரிக்கையை முன் வைத்திருப்பதாக தெரிவித்தார். இவர்களின் கோரிக்கையை, மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில் மின்சார துறை அதற்கான பரிசீலனையை மேற்கொண்டு பிக்சிடு சார்ஜ் மற்றும் டிமாண்ட் சார்ஜ்களில் விலை மாற்றம் செய்து ஒழுங்கு முறை ஆணையம் ஓரிரு நாட்களில் தாக்கல் செய்யும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க: https://www.malaimurasu.com/posts/cover-story/Kallakurichi-student-case--successive-twists-and-turns-one-by-one-students-confession

மின் கட்டணங்களில் ஏதேனும் சலுகைகள் தரப்படுமா?:

மின்வாரியத்தில் ஏற்படும் இழப்புகளை சரி செய்யக்கூடிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், சலுகைகள் தரக்கூடிய அளவிற்கு மின்சார வாரியம் தற்பொழுது உள்ளதா? என யோசிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

வீடுகள்  vs சிறு குறு நடுத்தர தொழிலாளர்கள்:

தொடர்ந்து பேசிய அவர், வீடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும், சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு மட்டும் விலை குறைப்பதற்கு பரிசீலனை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.