தமிழகத்தில் ஒமிக்ரான் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் ....!

பெங்களூருவில் ஒமிக்ரான் வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து தமிழகத்தில் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் ஒமிக்ரான் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் ....!

கோவை பன்னாட்டு விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதியில்வெப்பமானி கருவி விமான நிலையங்களில் பொறுத்தப்பட்டுள்ளது. வெளி நாடுகளில் இருந்து வருபவர்கள் 2 நாட்கள் விமான நிலையத்தில் தங்க வைக்க உள்ளார்கள் . பரிசோதனையில் தொற்று உறுதியானல் ஏழு நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்த படுவார்கள் என்றார்.

அதேபோன்று தமிழகத்தில் ஒமிக்கரான் வைரஸ் இல்லை எனவும் ஒருவேளை பரிசோதனை முடிவுகளில் தொற்று உறுதியானல் அரசு மருத்துவமனைகளில் ஒதுக்கப்பட்ட தனிமைபடுத்தப்பட்ட அறையில் சிகிச்சை அளிக்க இருக்கிறோம். மேலும் ஹைரிஸ்க் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்ய முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என கூறினார்.

கர்நாடகவில் தொற்று ஏற்ப்பட்டுள்ளதால், நாம் பெரிய அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுபடுத்த அனைவரும் முகக்கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், புதிய வகை கொரோனா பரவலை எதிர்கொள்ள தமிழகத்தில் அனைத்து வசதிகளும் உள்ளதாகவும் கூறினார்..