நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு கால அவகாசம் வழங்க ஆட்சேபனை இல்லை…  

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 7 மாத கால அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செயப்பட்டிருந்தது. ஏற்கனவே இரண்டு முறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக அவகாசம் கோரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த ஒரு நாள் கூட அவகாசம் அளிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்ததோடு, கால அவகாசம் வழங்குவதில் ஆட்சேபனை உள்ளதா? என்பது தொடர்பாக மனுதாரர் தரப்பு பிராமண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என மனுதாரர் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.