அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வை ஏற்கக்கூடாது - ஓ.பி.எஸ் மனு தாக்கல்!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வை ஏற்கக்கூடாது - ஓ.பி.எஸ் மனு தாக்கல்!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை ஏற்கக்கூடாது என  இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈ.பி.எஸ்:

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஓபிஎஸ் மற்றும்  அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கும் சிறப்பு தீர்மானம் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் கட்சி விதிகளில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ் தரப்பு தாக்கல் செய்தது. 

இந்திய தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்த ஓ.பி.எஸ்:

இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவில் சட்ட விதிகள் மீறப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டி ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நேற்று நடைபெற்ற செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வை ஏற்க கூடாது என்றும் அதற்கு அங்கீகாரம் தரக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.