பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ் ..! ஏன் தெரியுமா..?

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் தங்கள் படிப்பை தொடரும் வண்ணம் சில தளர்வுகளை வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ் ..! ஏன் தெரியுமா..?

உக்ரைன் மீது ரஷ்யா எடுத்து வரும் போர் நடவடிக்கையால் அங்கு கல்வி பயின்று வந்த இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு இந்தியா திரும்பினர். 

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், உக்ரைனில் சிக்கி தவித்த அனைத்து இந்தியர்களும் பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்து வரப்பட்டதற்கு நன்றி தெரிவித்துள்ளார். இதில் ரஷ்யா தொடுத்த போரால் உக்ரைனில் இருந்து சொந்த நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.  

கல்வியைத் தொடர முடியாமல் எதிர்காலத்தை நினைத்து நாடு முழுவதும் கிட்டதட்ட 14 ஆயிரம் மாணவர்கள் பரிதவிகப்பதாகவும், அதில் தமிழகத்தில் மட்டும் ஆயிரத்து 900 மாணவர்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

பெரும் பொருட்செலவில் உக்ரைன் சென்ற நிலையிலும் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலையால் பெற்றோரும் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள அவர், உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் தங்கள் படிப்பை தொடரும் வண்ணம் சில தளர்வுகளை வழங்க... தேசிய மருத்துவ ஆணையகத்திற்கு பிரதமர் மோடி பரிந்துரைக்க வேண்டும் என தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளர்.