மணப்பாறையில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு... வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்...

மணப்பாறையில் பொதுப்பாதை  ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தின் வாயில் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. 

மணப்பாறையில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு... வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்...

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருங்குளம், தெற்கு பாறைமேடு பகுதியில் 35 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பொது பாதையை தனியார் இருவர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும், மேலும் அந்த இடத்தில் வீடு கட்டும் பணியினை தொடங்கி உள்ளதாகவும், ஆக்கமிரப்பை அகற்றிட வலியுறுத்தி பலமுறை சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் தெற்கு பாறைமேடு பகுதியைச் பொதுமக்கள் நேற்று மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வட்டாட்சியர் லெஜபதிராஜ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.