பாமர மக்களின் எட்டாக்கனி பட்ஜெட் - ரஞ்சன் குமார்

பாமர மக்களின் எட்டாக்கனி பட்ஜெட் - ரஞ்சன் குமார்

வருங்காலத்தில் மோடியை வீட்டுக்கும் ராகுல் காந்தியை நாட்டுக்கும் அமர வைத்து செழிப்பான ஆட்சியை உத்திரவாதத்துடன் தருவார் என காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி துறை தலைவர் ரஞ்சன்குமார் தெரிவித்தார்தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக 5ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கே எஸ் அழகிரிக்கு சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி துறை சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் மற்றும் தொண்டர்களும் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பியும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர்.


அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கமிட்டி எஸ்சி துறை தலைவர் ரஞ்சன்குமார் 

காங்கிரஸ் கட்சியின் நான்காண்டு காலமாக வெற்றிகரமான தலைவராக இருந்து வருகிறார். தலைவராக பொறுப்பேற்ற பிறகு பாராளுமன்ற தேர்தலில் தொடர் வெற்றியும், சட்டமன்ற தேர்தலில் 18 எம்எல்ஏக்களையும் வெற்றி பெற செய்து  சிறப்பித்து வருகிறார். இந்திரா காந்தி வங்கிகளை தேசியமயமாக்கியதை போல கே எஸ் அழகிரி காங்கிரஸ் அரசியல் அதிகாரம் ஆகினார். கொடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்தவர்களை அரசியலில் பதவி கொடுத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். உலகிலேயே நீண்ட நடை பயணத்தை ராகுல்காந்தி வெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கிறார். கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை நடைபயணத்தின் மூலம் மக்களின் நிறை குறைகளை கேட்டறிந்து வருங்காலத்தில் மோடியை வீட்டுக்கும் ராகுல் காந்தியை நாட்டுக்கும் சேவை செய்து செழிப்பான ஆட்சியை உத்திரவாதத்துடன் தருவார்.

பிபிசி வெளியிட்டுள்ள மோடி,அமித்ஷா பிம்பத்தை தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி துறை அனைத்து மாவட்டங்களிலும் ஒளி பரப்புவதற்காக திட்டமிட்டுள்ளோம் அகில இந்திய எஸ்சி துறை தலைவர் ராஜேஷ் திலோத்தியா சென்னையில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிபிசி ஆவணப்படம் வெளியிடப்படும்.

மேலும் படிக்க| சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: இரண்டு வழி சோதனை நிறைவு

தேர்தலில் நிற்பது தான் அரசியல் கட்சியின் பண்பு நடைமுறை. தமிழ்நாட்டில் இடைதேர்தலில் நிற்காமல் ஆட்சி பிடிப்போம் தாமரை மலரும் என்பதெல்லாம் பொதுமக்களின் கானல் நீராகவே உள்ளது. ஈ வி கே எஸ் என் இளங்கோவன் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவார். பாமர மக்களின் எட்டாக்கனியாகவே பட்ஜெட்டின் நிலை உள்ளது.அனைத்து தரப்பு மக்களின் கட்சியாக காங்கிரஸ் விளங்குகிறது என்பது பிஜேபியின் பட்ஜெட் தாக்கல் மூலமாக தெரிகிறது என கூறினார்