குட்கா விற்பனை செய்ய லஞ்சம் வாங்கிய அதிகாரிகள்.. 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி - தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம்

குட்கா முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழக அரசிடம் அனுமதி கோரி  சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது.

குட்கா விற்பனை செய்ய லஞ்சம் வாங்கிய அதிகாரிகள்.. 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி - தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம்

குட்கா விற்பனை செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம்:

சென்னையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா , மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், வணிக வரித்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்டதாக 2017ம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

சிபிஐ கடிதம்:

இவ்விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ரமணா, ஓய்வுபெற்ற டிஜிபி டி. ராஜேந்திரன் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை  செய்ய அனுமதி கோரி தமிழக தலைமை செயலாளர் வெ. இறையன்புக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. 

தமிழக அரசு தரப்பில் அனுமதி கிடைத்ததும்,  12 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசிடம் அனுமதி பெற்று முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய முடியும் என்ற  அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் கடிதம் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது.