மீண்டும் ஒரு போலி மருத்துவர்....... பட்டபடிப்பு படித்துவிட்டு போலி மருத்துவம் பார்த்த முதியவர் கைது...!

மீண்டும் ஒரு போலி மருத்துவர்.......   பட்டபடிப்பு படித்துவிட்டு போலி மருத்துவம் பார்த்த முதியவர் கைது...!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பட்டபடிப்பு படித்துவிட்டு போலிமருத்துவம் பார்த்துவந்த முதியவர் அய்யாவு என்பவர் மீது பள்ளிபாளையம் அரசு மருத்துவ அலுவலர் வீரமணி பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி மருத்துவரை கைது செய்துள்ளனர். 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே லட்சுமிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு . 72 வயது முதியவரான இவர் மருத்துவம் படிக்காமல் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் சென்று அனுபவம் வாய்ந்த மருத்துவர் போல மருத்துவம் பார்த்து வருவதாக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை அலுவலர் வீரமணிக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து சுகாதார இணை இயக்குநரின் அறிவுறுத்தலின்  பேரில் பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திநர். 

அதில் அவர்,  இளங்கலை பட்டம் மட்டுமே முடித்துவிட்டு, மருத்துவம் படிக்காமல்  அய்யாவு வீடுவீடாக சென்று மருத்துவர்கள் பயன்படுத்தும் ஸ்டெதர்ஸ்கோப் பயன்படுத்தி மருத்துவம் பார்த்து தெரியவந்தது. இதையடுத்து போலிமருத்துவர் அய்யாவுவை பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதையும் படிக்க } தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் பள்ளம் தோண்டி எடுக்கும் மணல் எங்கே போகிறது...?

சமீப காலங்களில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்கள் மனதில் நம்பிக்கையின்மையும் பாதுகாப்பற்ற மனநிலையையம் உருவாக்கக்கூடும் என்பது வருந்துதற்குரிய உண்மை.  

 இதையும் படிக்க } புகார் அளிப்பதற்காக தலைமைச் செயலகம் வந்த 3 பேர்...குண்டுகட்டாக அழைத்து சென்ற போலீஸ்...!