அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்...   ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தி சிறப்பு பூஜை...

அனுமன் ஜெயந்தி விழாவை யொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு  1 லட்சத்து எட்டு வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு  பூஜை செய்யப்பட்டது.

அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்...   ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தி சிறப்பு பூஜை...

மார்கழி மாதம் அமாவாசையன்று அனுமன் அவதரித்தார். அந்த நாளை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. நாமக்கல் நகரில் நடுநாயகமாக வீற்றிருக்கும் 18 அடி உயர விஷ்வரூப ஆஞ்சநேயர் சுவாமியின் காலை 5 மணிக்கு  நடை திறக்கப்பட்டு 1,00,008 வடை மாலை சாத்தப்பட்டன. காலை 11 மணி வரை வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் ஆஞ்சநேயருக்கு காலை 11 மணிக்கு மேல் பால் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஆஞ்சநேயர்க்கு  மாலையாக சாத்தப்பட்ட 1,00,008 வடைகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபட உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் சட்டமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்  ஆகியோர் அதிகாலை 5 மணிக்கு கோவிலுக்கு வந்து சாமி தரிசம் செய்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவுக்கு வருவது வழக்கம். அதனால்  பக்தர்கள் சிரமமின்றி  தரிசனம்  செய்ய அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில்  செய்யப்பட்டுள்ளது.  ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு 500 பக்தர்கள் வீதம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.  பக்தர்களின் வசதிக்காக குடி நீர், கழிப்பிட வசதியை நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. சுகாதார துறை சார்பில் மருத்துவ குழு தயார் நிலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.