மதுரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததால் பரபரப்பு...

மதுரை நத்தம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததால் பரபரப்பு...

மதுரை நத்தம் சாலையில் செட்டிக்குளம் பகுதியில் 694 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ,கடந்த 3 ஆண்டுகளாக 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு பறக்கும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இன்று வழக்கம்  போல ஊழியர்கள் தங்களது பணிகளை தொடர்ந்து ஈடுப்பட்டு இருந்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக விரைந்து வந்த தீயனைப்பு துறையினர், காவல்துறையினர் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த இருவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஒருவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.மேலும் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் பணியில் இருந்த ஊழியர்களை தவிர வேறு யாரும் இல்லை என கூறப்படுகின்றது. இதனால் காயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்காது என கூறப்படுகிறது. இருப்பினும், விபத்தின் இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்து மீட்புக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.