ஒருவழிப் பாதையாகிறது ஹாரிங்டன் சுரங்கப்பாதை... போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு...

இன்று முதல் மீண்டும் ஒரு வழி பாதையாக மாறுகிறது சென்னை ஹாரிங்டன் சாலை சுரங்கப்பாதை.

ஒருவழிப் பாதையாகிறது ஹாரிங்டன் சுரங்கப்பாதை... போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு...

சென்னை ஹாரிங்டன் சுரங்கப்பாதை ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்கள் தவிர இதர நாட்களில் காலை 8. 30 மணி முதல் 10.00 மணி வரையும், மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரையும் ஒரு வழிபாதையாக இருக்கும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

சென்னை சேத்துப்பட்டு - ஈ.வே.ரா சாலையை இணைக்கும் ஹாரிங்டன் சுரங்கப்பாதையில் வாகன நெரிசலை தடுக்க கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் காலை, மாலை ( பீக் நேரங்களில்)  கூட்ட நெரிசல் அதிகரிக்கும் நேரங்களில் ஹாரிங்டன் சுரங்கப்பாதை ஒருவழிபாதையாக இருந்தது. 

கொரோனா தொற்றுக்கு பிறகு சாலையில் வாகன எண்ணிக்கை குறைந்ததால் கடந்த மார்ச் 2020 முதல் ஹாரிங்டன் சாலை சுரங்கப்பாதை இரு வழி பாதையாக மாற்றப்பட்டது. 

தற்போது கொரொனா தொற்று குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் மீண்டும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இன்று முதல் ஹாரிங்டன் சாலை சுரங்கப்பாதை கூட்ட நெரிசல் அதிகமாக இருக்க கூடிய காலை 8. 30 மணி முதல் 10.30 மணி வரையும் அதேபோல, மாலை 6 மணியில் இருந்து 8 மணி வரையும் ஒருவழிபாதையாக இருக்கும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு பலகையை வைத்துள்ளது மாநகர போக்குவரத்து காவல்துறை வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் காலை 8. 30 மணி முதல் 10.30 மணி வரை சேத்துப்பட்டு சந்திப்பிலிருந்து ஹாரிங்டன் சுரங்கப்பாதை வழியாக ஈவேரா சாலையை நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது அத்தகைய வாக னங்கள் சேர்க்கப்பட்ட சந்திப்பில் இருந்து நேரடியாக மெக்கானிக்கல் சாலை குருசாமி மேம்பாலம் மற்றும் சந்திப்பு வழியாக செல்லலாம். 

அதேபோல மாலை 6 மணி முதல் 8 மணி வரை ஈவேரா சந்திப்பிலிருந்து ஹாரிங்டன் சுரங்கப்பாதை வழியாக நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது அத்தகைய வாகனங்கள் ஈவேரா சாலை மற்றும் ஹாரிங்டன் சாலை சந்திப்பில் இருந்து நேரடியாக ஈவேரா சாலை சந்திப்பு வலதுபுறம் திரும்பி டாக்டர் குமாரசாமி மேம்பாலம் வழியாக சேத்துப்பட்டு சந்திப்பிற்கு செல்லலாம்.

மேலும், ஹாரிங்டன் சந்திப்பில் வசிக்கும் குடியிருப்புகளின் நன்மை கருதி ஹாரிங்டன் சாலையில் சேத்துப்பட்டு சந்திப்பிலிருந்து ஹாரிங்டன் சுரங்கப்பாதை வரை செல்லவும் "யூ" திரும்பவும் மேற்கொள்ளும் அனுமதிக்கப்படுகிறது.