2 தவணை  தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே திருவண்ணாமலை கோவிலுக்குள் அனுமதி!! அதிரடி உத்தரவால் திருப்பி அனுப்பப்பட்ட பக்தர்கள்...

கோவிலுக்குள் 2 தவணை  தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதி!!

2 தவணை  தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே திருவண்ணாமலை கோவிலுக்குள் அனுமதி!! அதிரடி உத்தரவால் திருப்பி அனுப்பப்பட்ட பக்தர்கள்...

இந்தியாவில்  கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் மீண்டும் அசுர வேகத்தில் போய்கொண்டிருக்கிறது. தொற்று பரவலை  கட்டுப்படுத்த மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வருகிறது.

அந்த வகையில்  திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து வரும் மாநில அரசு அவ்வப்போது உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி திருவண்ணாமலையில் உள்ள  அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதை  கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு இன்று  முதல் கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தியவர்கள் மட்டுமே கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து இன்று காலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று அல்லது கைப்பேசியில் பெறப்பட்ட குறுஞ்செய்தி ஆகியவற்றை காண்பித்த பின்னரே கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 2 தவனை தடுப்பூசி செலுத்தாதவர்கள் அனைவரும்  திருப்பி அனுப்பப்பட்டனர்.