கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு...! ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு..!

ஏரி பாசன வாய்க்கால் பாதையில் பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு..

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு...! ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு..!

விழுப்புரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட சாலாமேடு கிராமத்தில் விவசாய நிலத்திற்கு, நீர் செல்லும் பாதையில் பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க விழுப்புரம் நகராட்சி சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால், இந்த இடம் வழியாக விவசாய பயன்பாட்டிற்கு செல்லும் ஏரி நீர் பாசன வாய்க்கால் முற்றிலும் பாதிப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் பாதிப்படையும் என்பதாலும் மேலும் மேய்ச்சல் நிலங்கள் பாதிப்படைந்து ஆடு, மாடுகள் பாதிக்கப்படும். எனவே இந்தப் பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது என்றும் சாலாமேடு கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் மோகனை சந்தித்து மனு அளித்தனர்.

இந்த திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும்,  இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் அடுத்த கட்டமாக கிராம மக்களை ஒன்று திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை மற்றும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தை நடத்துவோம் எனவும் இந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.