காவலர்களின் குறைகளை கேட்கவும், அவற்றை நிவர்த்தி செய்யவும் காவல்துறை ஆணையம் அமைக்க உத்தரவு...

காவலர்களின் குறைகளை கேட்கவும், அவற்றை நிவர்த்தி செய்யவும் காவல்துறை ஆணையம் அமைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

காவலர்களின் குறைகளை கேட்கவும், அவற்றை நிவர்த்தி செய்யவும் காவல்துறை ஆணையம் அமைக்க உத்தரவு...

தமிழகத்தில் காலியாக உள்ள காவல்துறை பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், காவலர்களுக்கென தனி ஆணையம் அமைக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காவல்துறையினரின் குறைகளைக்  கேட்கவும் அவற்றை நிவர்த்தி செய்யவும் 3 மாதங்களுக்குள் காவல்துறை ஆணையம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

இந்த ஆணையத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி, மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள் இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். காவல்துறையினருக்கு ஷிப்ட் அடிப்படையில் 8 மணி நேரம் மட்டுமே பணி வழங்குவது குறித்து பரிசீலிக்க  நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.  

காவல்துறையில் காலியாக உள்ள 16 சதவீத பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். பணியின் போது உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையை 25 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.