ஸ்டெர்லைட் ஆலையின் 2-வது அலகில் இன்று முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம்...

ஸ்டெர்லைட் ஆலையின் 2-வது அலகில் இன்று முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் 2-வது அலகில் இன்று முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கி உள்ளது.


கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தூத்துக்குடியில் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தயாரிக்கும் பணி தொடங்கி, தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் 2-வது அலகில் இன்று முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கி உள்ளது.

முதல் அலகில் மே 13-ம் தேதி முதல் 30 டன்னுக்கு மேல் ஆக்சிஜன் உற்பத்தியான நிலையில், 2-வது அலகிலும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்படாது. ஸ்டெர்லைட் ஆலையில் தலா 500 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு ஆக்சிஜன் அலகுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.