பேருந்து எண்ணை எழுதிய மாணவி! கேள்வி கேட்டதால் தற்கொலை!!!

பேருந்து எண்ணை எழுதிய மாணவி! கேள்வி கேட்டதால் தற்கொலை!!!

ஈரோடு: கொடுமுடி அடுத்துள்ள கொந்தளம் மண்திட்டு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் மகள் தேவதர்ஷினி. இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில், கல்லூரியிலிருந்து பள்ளிக்குச் சென்று மார்க் சீட்டு வாங்கி வருவதாகக் கூறி நேற்று மதியம், K10 என்ற நகரப்பேருந்தில் தேவதர்ஷினி சென்றுள்ளார்.

மாலை வீட்டுக்கு வந்ததும் தேவதர்ஷினி தனது கையில் K10 என்று எழுதிக்கொண்டு இருந்ததைப் பார்த்த தேவதர்ஷினியின் தம்பி, சித்தி முறையான சரஸ்வதி மற்றும் காளியம்மாளிடம் தெரிவித்துள்ளான். உடனடியாக சித்திகள் இருவரும் வந்து எதற்காக K10 என்று எழுதுகிறாய் என்று கிடுக்குப்பிடி கேள்வி கேட்டுள்ளார்.

இதனால் சித்திகளுக்கும் தேவதர்ஷினிகும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இரவு 11 மணிவரை இப்பிரச்சனை நடைபெற்றுள்ளது. சித்தியின் மிரட்டல்களுக்கு பயந்து மன உளைச்சலுக்கு ஆளான தேவதர்ஷினி இன்று அதிகாலை 5 மணிக்கு  தனது வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கொடுமுடி காவல் துறையினர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கிணற்றிலிருந்து தேவதர்ஷினியின் உடலை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.