அறுவடைக்கு தயாராக இருந்த 15 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்...

தஞ்சை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 15 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகி உள்ளதாக  விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

அறுவடைக்கு தயாராக இருந்த 15 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்...

தஞ்சை மாவட்டத்தில் சுமார் 1.66 லட்சம் ஏக்கர்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சூரக்கோட்டை, அம்மாபேட்டை,  பொய்யுண்டார்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பல லட்சம்  ரூபாய் நஷ்டம் ஏற்படும் என வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள்,  இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு இல்லாத நிலையில், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கண்ணீர்மல்க  கோரிக்கை விடுத்துள்ளனர்.