பூட்டியேக் கிடக்கும் ஊராட்சிமன்ற அலுவலகம்... பொதுமக்கள் கடும் அவதி...

கோவையில், அலுவலர்கள் பற்றாக்குறையால் பூட்டிக் கிடக்கும் ஊராட்சி மன்ற அலுவலகத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

பூட்டியேக் கிடக்கும் ஊராட்சிமன்ற அலுவலகம்... பொதுமக்கள் கடும் அவதி...

கோவை அசோகபுரம் ஊராட்சி அலுவலகத்தில், அரசால் நியமிக்கப்பட்ட ஒரேயொரு ஊராட்சி செயலர் மட்டுமே பணியில் உள்ளார். அவரது உதவிக்காக சிலரை தற்காலிக பணியில் அமர்த்தி, வரி வசூல், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டிங் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், அரசால் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் தவிர, வேறு யாரும் பணிபுரியக் கூடாது என கோவை ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியதை அடுத்து, அலுவலர்கள் பற்றாக்குறையால் பெரும்பான்மையான சமயங்களில் ஊராட்சி மன்ற அலுவலகம் பூட்டியே கிடப்பதால் அவதிப்படும் பொதுமக்கள், போதுமான பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.