ஓ. பன்னீர்செல்வத்தின் வெற்றி செல்லாது? சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போடி தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டார்.  அவரை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்ட நிலையில், இருவருக்குமிடையே கடுமையான போட்டி நிலவியது.

இந்த நிலையில், தேர்தல் முடிவில் தங்க தமிழ்ச்செல்வனை விட ஓ.பன்னீர் செல்வம் 11,055 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றார். ஆனால், அவரது வெற்றி செல்லாது என அறிவிக்ககோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. போடி தொகுதியைச் சேர்ந்த மிலானி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்புமனுவில் விவரங்களை மறைத்ததாகவும், அவரது வெற்றியைச் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.