"காவலர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் நாட்டில் அமைதி நிலவும்" - மா. சுப்ரமணியன்

"காவலர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் நாட்டில் அமைதி நிலவும்" - மா. சுப்ரமணியன்

காவலர்கள் தெளிவாக, ஆரோக்கியமாக, நல்ல மனநிலையில் இருந்தால் தன் நாட்டில் அமைதி நிலவும் என அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனையில் நடைபெற்ற காவலர் நலன் என்ற  மென்பொருள் செயலி வெளியிடும் நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கலந்து கொண்டு  காவலர் நலன் செயலியை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில்  அமைச்சர் மா சுப்ரமணியன் அங்குள்ள மருத்துவர்களுக்கு நோயாளிகளை கண்காணிக்க உதவவும் வகையில் கையடக்க கணினி வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மற்றும் பிற அதிகாரிகள்,  முதன்மை மருத்துவர்கள்  மற்றும் செவிலியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் :- 

தொடக்கத்தில், 5 மருத்துவர்களை கொண்டு ஆரம்பித்த இந்த மருத்துவ மனை இன்று 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றியது ஒரு  சாதனை  என்றும், சென்னை காவல் ஆணையர்  சங்கர் ஜிவாள் கடந்த 2 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

சென்னை மாநகரின் மேயர்  பொறுப்பில் தான் இருந்தபொழுது மனநலம் பாதிக்கப்பட்டு, உதவியின்றி இருந்த நபர்களுக்கு  உதவிய பொழுது சிலர் இந்த பணி  மாநகராட்சி நிர்வாகத்தின் பணி இல்லை என்று கூறியதாகவும் அதற்கு  அவர் மாநகராட்சிக்கு எந்தவித வரையறையும் இல்லை, மாநகர எல்லைக்குள் இருக்கும் மக்களை காப்பது மாநகராட்சி நிர்வாகத்தின் ஒரு பகுதி தான் என்று பதில் அளித்ததாகவும்  கூறினார்.

சென்னை எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனை வரும் காலங்களில் தீயணைப்பு மற்றும் சிறைத்துறை காவலாளிகளுக்கும்   பயன்படும் வகையில் மாற்றவிருப்பது வரவேர்க்க தக்கது என்றும், காவலர்கள் தெளிவாக, ஆரோக்கியமாக, நல்ல மனநிலையில் இருந்தால் தன் நாட்டில் அமைதி நிலவும் என்றும் கூறினார். 

இதையும் படிக்க      | "இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர முடியாது" ஆளுநர் அதிரடி!