ஆடி மாத தள்ளுபடி: ஆடைகள் வாங்க தி.நகருக்கு குவிந்த மக்கள்!!

ஆடி மாத ஆஃபரை யொட்டி புத்தாடைகள் வாங்க பொதுமக்கள் ஆர்வத்தோடு சென்னை தியாகராயநகரில் குவிந்தனர்.

ஆடி மாத தள்ளுபடி: ஆடைகள் வாங்க தி.நகருக்கு குவிந்த மக்கள்!!

ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு நேற்று முதல் ஆடி தள்ளுபடி வியாபாரம் தொடங்கி உள்ள நிலையில் சென்னை தியாகராய நகரில் கடந்த ஞாயிறன்று பொதுமக்களின் கூட்டம் என்பது கட்டுக்கடங்காத அளவுக்கு அதிக அளவில் இருந்ததால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி சுகாதாரத்துறை காவல்துறை சார்பில் மூன்று துறைகளும் ஒன்றிணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீதிவீதியாக கடை கடையாக சென்று நேற்றைய தினம்  கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஒரு சிலர் விதி முறைகளை கடைபிடித்து  செல்லும் அதே நேரத்தில் சிலர் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் ஆடி மாத ஆஃபரை யொட்டி புத்தாடைகள் வாங்க பொதுமக்கள் ஆர்வத்தோடு சென்னை தியாகராயநகரில் குவிந்தனர்.

விதிமுறைகளை பின்பற்றாதவர்களை கண்காணிக்க நோக்கில் ரங்கநாதன் தெரு நுழைவாயிலில் மாநகராட்சி பணியாளர்கள் வைத்து நோய் தடுக்கும் பணியினை சானிடைசர்கள் பயன்படுத்தி வெப்பமானிகள் மூலம் காய்ச்சல் உள்ளதா என்பது குறித்து கண்டறிந்து முக கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு முக கவசங்களை வழங்கி வருகின்றனர்.