மின்துறை அதிகாரிகளின் அலட்சியம்... குடிநீரின்றி தவிக்கும் பொதுமக்கள்...

மின்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் குடிநீரின்றி தவிக்கும் பொதுமக்கள்

மின்துறை அதிகாரிகளின் அலட்சியம்... குடிநீரின்றி தவிக்கும் பொதுமக்கள்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது சித்தால் கிராமம். இந்த கிராமத்தில் காலனி  பகுதியில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். காலனி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு என தனியாக  ஒரு மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) உள்ளது. இந்த மின்மாற்றியில் ஒரு மாதகாலமாக மின்மாற்றியில் பயதூ ஏற்பட்டு உயரழுத்த மின்கம்பிகள் தரையில் அறுந்து  கிடந்து காணப்படுகிறது. மற்றும் கைக்கு எட்டும் வகையில் உயர் அழுத்த மின் கம்பிகள் தொங்குகின்றன. இதனால் அந்தக் காலனி பகுதியில் தொடர்ந்து  மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
இதனால் பொதுமக்கள் பெரும்  சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதால் பெரும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. மற்றும் தொடர் மின்வெட்டு காரணமாக விவசாயிகள் விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்ச முடியவில்லையென  வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இந்த மின்மாற்றி காலனி பகுதியில் அருகே உள்ளதால் பெரும் விபத்து ஏதேனும் நேரிடுமோ என பொதுமக்கள் அச்சத்துடன் அவ்வழியாக பயணித்து  வருகின்றனர்.
பலமுறை மின் துறை அலுவலகத்துக்குச் சென்று புகார் அளித்தும் எந்த ஒரு அரசு அதிகாரிகள் வந்து பார்த்தது கூட இல்லை என  பொது மக்கள் மனவேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த பழதூ அடைந்த மின்மாற்றியை அகற்றிவிட்டு  புதிய மின் மாற்றி அமைத்து கொடுக்குமாறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.