தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகளும், டீசல் விலையும் 14 காசுகளும் குறைந்துள்ளது. 

தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகளும், டீசல் விலையும் 14 காசுகளும் குறைந்துள்ளது. 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை  மாற்றியமைத்து வருகின்றன. இதனால் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. இதேபோல் டீசல் விலையும் உச்சத்தை அடைந்துள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர்ந்து மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.  

தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. கடந்த வாரத்தில் டீசல் விலையில் சற்று சரிவு காணப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 12 காசுகள் குறைந்து 99 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலையும் 14 காசுகள் குறைந்து லிட்டருக்கு 93 ரூபாய் 52 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.