சென்னையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு...லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று 2வது நாளாக  மீண்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சென்னையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு...லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. ஆனால் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் கடந்த 10 ஆம் தேதி வெளியான நிலையில்  நாடு முழுவதும் பெட்ரோல் டீசல், விலை மத்திய அரசால் உயர்த்தப்பட கூடும் என தகவல் வெளியானது.

அதன்படி சென்னை பெட்ரோல் டீசல் விலை நேற்று அதிரடியாக உயர்த்தப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு தலா 76 காசுகள் உயர்த்தப்பட்டன. இந்த நிலையில் தற்போது இரண்டாவது நாளாக சென்னையில் பெட்ரோல், டீசலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் உயர்த்தப்பட்டு 102 ரூபாய் 91 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலையும் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரிக்கப்பட்டு 92 ரூபாய் 95 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை இரண்டாவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது சாமானிய மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.