ஆடிபெருக்கையொட்டி காவிரிக் கரையோர பகுதிகளில் பக்தர்கள் புனித நீராட தடை விதிப்பு...

ஆடிபெருக்கையொட்டி, தமிழகத்தில் உள்ள பல்வேறு முக்கிய கோயில்கள், காவிரிக் கரையோர பகுதிகள் மற்றும் கடற்கரையோரங்களில் இன்றும் நாளையும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆடிபெருக்கையொட்டி காவிரிக் கரையோர பகுதிகளில் பக்தர்கள் புனித நீராட தடை விதிப்பு...

ஆடிபெருக்கையொட்டி, திருச்சியின் முக்கிய கோயில்கள் மற்றும் காவிரி கரையோரப் பகுதிகளில் பக்தர்களுக்கு இன்றும் நாளையும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் போன்ற முக்கிய கோயில்களுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை ஆடி மாதம் முக்கிய விழாவாக கருதப்படும் ஆடி 18 ஐ முன்னிட்டு ஶ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறை போன்ற பகுதிகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் இன்றும் நாளையும் பக்தர்களுக்கு தடை விதித்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார், இதனால் அப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி ஆற்றில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கன்று ஏராளமான பொதுமக்கள் புனித நீராடுவது வழக்கம். இந்நிலையில் நாளை ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்கி நீராடுவதை தடுக்கும் வகையில் தடுப்புகளை அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பூலாம்பட்டியில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் கன்னியாகுமரி கடற்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டுபொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.