4 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள்...உதயநிதி கின்னஸ் சாதனை!

4 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள்...உதயநிதி கின்னஸ் சாதனை!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே 4 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து கின்னஸ் சாதனை சான்றிதழை பெற்றுள்ளார்.

புதர்மண்டியாக கிடந்த கோயில் நிலம்:

இடையக்கோட்டையில் உள்ள திருவேங்கடநாத பெருமாள் கோயிலுக்குச் சொந்தமாக, 117 ஏக்கர் நிலம் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் செடி, கொடிகள், சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டிக் கிடந்தது. தொடர்ந்து அதனை சீரமைத்து அங்கு மரக்கன்றுகளை நட முடிவு செய்யப்பட்டது.

இதையும் படிக்க: சிக்கிம்: விபத்துக்குள்ளான ராணுவ வாகனம்... 16 பேர் உயிரிழப்பு!

திட்டத்தை தொடங்கி வைத்த உதயநிதி:

அதன் ஒரு பகுதியாக 4 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இந்நிலையில் இத்திட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கின்னஸ் சாதனை சான்றிதழ்:

இதை தொடர்ந்து கின்னஸ் சாதனைக்கான  சான்றிதழ் அமைச்சர் உதயநிதியிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்  அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, சக்கரபானி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.