கள்ளக்காதலுக்கு பிறந்த குழந்தை...சட்டவிரோதமாக முஸ்லீம் தம்பதிக்கு தத்து கொடுத்த தாய்...விசாரணையில் அம்பலம்!

மதுரை அலங்காநல்லூர் அருகே கள்ளகாதலில் பெற்றெடுத்த குழந்தையை சட்டவிரோதமாக முஸ்லீம் தம்பதிக்கு தத்து கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கள்ளக்காதலுக்கு பிறந்த குழந்தை...சட்டவிரோதமாக முஸ்லீம் தம்பதிக்கு தத்து கொடுத்த தாய்...விசாரணையில் அம்பலம்!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சிக்கந்தர்சாவடி பகுதியை சேர்ந்தவர் முத்துமாரி. 38 வயதான இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், 3 மகன்களும் உள்ளனர்.  இவரது கணவர் கடந்த 3 வருடங்களுக்கு முன் இறந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட கள்ள தொடர்பால் முத்துமாரி கர்ப்பமுற்றார். 

இந்த நிலையில் தன் பிள்ளைகளுக்கு தான் கர்ப்பமாக இருப்பது தெரிய கூடாது என்பதற்காக வயிற்றில் கட்டி இருப்பதாக கூறி மறைத்து வந்துள்ளார். ஆரம்ப சுகாதார மைய செவிலியர்களின் உதவியுடன் முத்துமாரி மதுரை அரசு மருததுவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அந்தப் பெண்னிடம் நலம் விசாரிப்பதற்காக செவிலியர்கள் சென்ற போது வீட்டில் குழந்தை இல்லாதது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது அந்தப் பெண் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இது குறித்து செவிலியர்கள் அலங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

காவல் துறையினர் விசாரணை நடத்திய போது, தான் பெற்ற குழந்தையை ஒரு முஸ்லீம் தம்பதிக்கு தத்து கொடுத்துவிட்டாதாக கூறியுள்ளார் முத்துமாரி. ஆனால் அந்தப் பெண் காசுக்காக குழந்தையை விற்பனை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்படி ஒருவேளை அந்த பெண் குழந்தையை தத்து கொடுத்திருந்தாலும், விதி முறைகள் பின்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.