NIA அலுவலகம் முன்பு போலீசார் குவிப்பு!

NIA அலுவலகம் முன்பு போலீசார் குவிப்பு!

எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டம் நடத்தப் போவதாக கிடைத்த தகவலின் பேரில் தேசிய பாதுகாப்பு முகமை அலுவலகம் முன்பாக காவல்துறை குவிக்கப்பட்டுள்ளர்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு முகமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக எஸ்.டி.பி. ஐ கட்சியினர் அறிவிப்பு விடுத்ததாக வந்த தகவலை தொடர்ந்து இரண்டு துணை காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 15 காவலர்கள் தேசிய பாதுகாப்பு முகமை அலுவலகம் முன்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற மத கலவரத்தில் மசூதி இந்துத்துவ அமைப்பினரால் எரிக்கப்பட்டது மற்றும் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டது உள்ளிட்டவற்றை எதிர்த்து எஸ்டிபிஐ கட்சியினர் இன்று தேசிய பாதுகாப்பு முகமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தகவலை தொடர்ந்து இந்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் எஸ்டிபிஐ கட்சித் தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட பலரின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:”7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணமும் வசூலிக்கக்கூடாது” - தமிழ்நாடு அரசு உத்தரவு