பேச்சாடா பேசுன...பெரியார் வேடமணிந்த குழந்தையை கொன்னு தொங்கவிடனும்... கமெண்டால் கம்பி எண்ணும் வெங்கி..

பேச்சாடா பேசுன...பெரியார் வேடமணிந்த குழந்தையை கொன்னு தொங்கவிடனும்... கமெண்டால் கம்பி எண்ணும் வெங்கி..

ரியாலிட்டி ஷோ ஒன்றில் பெரியார் வேடம் அணிந்த குழந்தையை கொன்று ரோட்டில் தொங்க விட வேண்டும் என கமெண்ட் செய்த நபர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

பொதுவாகவே குழந்தைகள் எது செய்தாலும் பெற்றோர்களாக இருந்தாலும் சரி, வேறு யாரேனும் இருந்தாலும் சரி ரசித்துக்கொண்டிருப்பார்கள். குழந்தைகளை பேச வைத்து ரசிப்பது, விளையாட வைத்து ரசிப்பது என்று பல்வேறு விதமாக ரசித்துவருவார்கள். அதிலும் குழந்தைகளை மற்றவர்கள் போன்று நடிக்க வைத்து பார்ப்பது இன்னும் கொண்டாட்டத்தை தரும்.

அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த சில நாட்களாக குழந்தைகளை வைத்து ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்தி வருகின்றனர். இதன்மூலம் குழந்தைகளின் திறமைகள் வெளியே வருவதால் பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளை இந்த மாறி நிகழ்ச்சிகளுக்கு அனுப்புகின்றனர். 

காமெடியோடு சமூக கருத்துக்களையும் சொல்லும் வகையில் அந்த ரியாலிட்டி ஷோ அமைந்துள்ளதால், குழந்தைகள் பல வேடங்களில் தங்களின் திறமைகளை காட்டி வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தை ஒன்று பெரியார் வேடமணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது, பெரும் பேசுபொருள் ஆகியது.

இந்நிலையில் அந்த ரியாலிட்டி ஷோவை பார்த்த, கயத்தாறு பேரூராட்சியில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் வெங்கடேஷ் குமார் பாபு என்ற நபர் பெரியார் வேடம் அணிந்த குழந்தையை அடித்து கொன்று ரோட்டில் தொங்க விட வேண்டும் என்றும், அப்போது தான் மற்ற குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் பயம் வரும் என்றும் கூறி சமூகவலைதளமான பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் ஏன் வா.உ.சி., தேவர், பாரதி , நேதாஜி இவர்கள் வேஷம் போட முடியாதா என்றும் வெங்கடேஷ் குமார் பாபு என்ற பெயரில் இருந்த அந்த நபர் சர்ச்சைக்குரிய வகையில் கமெண்ட் செய்திருந்தார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குழந்தைகள் நிகழ்ச்சியில் பெண் விடுதலை, இளைய சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. ஆனால், வெங்கடேஷ் குமார் பாபு என்ற பெயரில் மிக மோசமாக கமெண்ட் செய்திருக்கும் இந்த நபர், தனக்கு பிடிக்காத வேடமாக இருந்தாலும் கூட மழலை என்று பாராமல் காட்டுத்தனமாக பேசிய அடிப்படை மதவாதியை கண்டித்து பலரும் கடும் கண்டனங்களை குவித்து வருகின்றனர்.

மேலும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில், வெங்கடேஷ் குமார் பாபு மீது இதுகுறித்து கயத்தாறு பேரூர் தி.மு.க. செயலாளர் சுரேஷ் கண்ணன் கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வெங்கடேஷ் குமார் பாபுவை கைது செய்து, அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.