2 நாட்களாக அலைந்து தேடி கொள்ளையர்களை பிடித்து ஆஜர்படுத்திய காவல்துறை: அனைவரும் நண்பர்கள் என அந்தர்பல்டி அடித்த புகார்தாரர்...

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர்களை 2 நாட்களாக அலைந்து தேடி பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் , புகார் அளித்தவர் அனைவரும் தமது நண்பர்கள் என்றும் போலியான புகார் அளித்ததாகவும் கூறி அந்தர்பல்டி அடித்த சம்பவம் போலீசாரை திக்குமுக்காடச்செய்தது.

2 நாட்களாக அலைந்து தேடி கொள்ளையர்களை பிடித்து  ஆஜர்படுத்திய காவல்துறை: அனைவரும் நண்பர்கள் என அந்தர்பல்டி அடித்த புகார்தாரர்...

சென்னை சூளைப் பகுதியை சேர்ந்தவர் மனிஷ் இவர் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகேயுள்ள அல்லிக்குளம் பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி பணிகளை முடித்துவிட்டு இரவு 1 மணி அளவில் வீட்டுக்கு திரும்பியபோது, வால்டாக்ஸ் சாலையில் பின்தொடர்ந்து வந்த 5 நபர்கள் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முற்பட்ட போது  தாம் லாவகமாக  தப்பி விட்டதாகவும் கூறி யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து வழிப்பறி கொள்ளையர்களை பிடித்து நீதமன்றத்தில் ஆஜர் செய்த போது அங்கி வந்த மனீஷ் ,இப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்றும் அனைவரும் தமது  கூட்டாளிகள் என்றும் தெரிவித்ததுடன் இனிமேல் இப்படி நடந்து கொள்ளமாட்டோம் என நீதிபதியிடம் தெரிவித்தார். அப்போது 3 நாட்களாக அலைந்து திரிந்து பிடித்த குற்றவாளிகளை நண்பர்கள் என புகார் அளித்தவறே பல்டி அடித்ததால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர். இந்த சம்பவத்தால் நீதிமன்றத்திலும் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.