நடுரோட்டில் லஞ்சம் வாங்கிய போலீஸ்... வைரலாகும் வீடியோ...

சென்னை திருமங்கலத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் நடுரோட்டில் கனரக வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடுரோட்டில் லஞ்சம் வாங்கிய போலீஸ்... வைரலாகும் வீடியோ...

சென்னை திருமங்கலம் வி.ஆர். மால் அருகே நேற்று மாலை 4.30 மணி அளவில் ஒரு போக்குவரத்து போலீசார் நடுரோட்டில் லாரிகளை மடக்கி லஞ்சம் வாங்கி கொண்டு இருந்தார். இதை பார்த்த பொதுமக்கள் செல் போனில் வீடியோ எடுத்து சமூகவளை தளங்களில் வெளியிட்டனர்.

அதன் பின்னர் விசாரணை செய்ததில் திருமங்கலம் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் சீனிவாசன் என்பவர் அந்த வழியாக செல்லும் லாரிகள் மற்றும் கனரக வாகன ஓட்டிகளை நிறுத்தி லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது தெரிய வந்தது. மேலும் இது தொடர்பாக வாகன ஒட்டிகள்  ஒருசிலர் தெரிவித்தபோது,

திருமங்கலம் பகுதியில் பட்டபகலில் சாலையில் செல்லும் லாரிகளை குறி வைத்து நடு ரோட்டில் வழி மடக்கி வாகன ஓட்டுனர்களிடம் லஞ்சம் வாங்கும் போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஒட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட கோயம்பேடு சரகத்தில் உதவி ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரலாக பரவி வந்தது ஆனால் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் காவல்துறை எடுத்ததில்லை இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.