தரம் இல்லாத சாலை; பொதுமக்கள் போராட்டம்!

தரம் இல்லாத சாலை; பொதுமக்கள் போராட்டம்!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தரம் இல்லாத சாலை அமைத்ததால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

நீலகிரி மேல் குன்னூர் பகுதியில் இருந்து மேல் குன்னூர் காவல் நிலையம் வரை 700 மீட்டருக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான சாலை புனரமைப்புப் பணி குன்னூரை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஈஸ்வரன், என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலை பணி கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த நிலையில், தார் சாலைக்கு கொண்டு வரப்பட்ட தார் கலந்த ஜல்லி கலவையில் தாரின் அளவு குறைக்கப்பட்டதால் கையில் அள்ளினால் சாலை பியர்ந்து வரும் அளவிற்கு தரம் இல்லாமல் அவசர அவசரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்தனர்,

இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலையின் பணிகள் தரைக்குறைவாக உள்ளது என்றும், உடனே பணிகளை நிறுத்து மாறும், அதிகாரிகள் மற்றும் திமுக நகரச் செயலாளர் ராமசாமி நகர மன்ற தலைவர் ஷீலா கேத்தரின் ஆகியோர் சரியான ஆய்வு செய்யாமல் கணிசமான தொகையை கமிஷனாக பெற்றுக் கொண்டு பணிகள் நடப்பதாகவும் கூறி போராட்டத்தில் இறங்கினர்.

இதையும் படிக்க : ஆகஸ்ட் 23 ஆம் நாள் தேசிய விண்வெளி நாளாக அறிவிப்பு!

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திமுக நகரச் செயலாளர் ராமசாமி மற்றும் நகர மன்ற தலைவர் ஷீலா கேத்தரின் ஆகியோருடன் வாக்குவாதத்தில் இறங்கியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, தரமற்ற தார் சாலையை எடுத்துவிட்டு புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததன் பேரில், அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி துணையுடன் தரமற்ற தார்களை அகற்றிய பின் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இதுபோன்று குன்னூர் நகராட்சி பகுதியில் பல வளர்ச்சிப் பணிகள் தரம் இல்லாமல் நடப்பதாகவும், இதற்கு காரணம் எந்த வேலை ஒப்பந்ததாரிடம் ஒப்படைத்தாலும் நகர மன்ற தலைவர் மற்றும் நகரச் செயலாளர் வார்டு உறுப்பினர்கள் என அனைவரும் தங்களுக்கு வேண்டிய கமிஷனை பெற்றுக் கொள்வதால் இதுபோன்று தரமற்ற பணிகள் குன்னூர் நகராட்சியில் நடப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

புதிதாக அவசர அவசரமாக இட்ட தார் சாலையை அதே ஒப்பந்ததாரர் நகரமன்ற தலைவர் மற்றும் நகர செயலாளர் முன்பாக ஜேசிபி மூலம் அகற்றி மீண்டும் புதிய தார் சாலை அமைத்துக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் அப்பகுதி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.