9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குபதிவு நிறைவு...மூடி சீலிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்கு பெட்டிகள்...

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குபதிவு நிறைவு பெற்றது.

9 மாவட்ட  ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குபதிவு நிறைவு...மூடி சீலிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்கு பெட்டிகள்...
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு  நடைபெற்றது.
பொதுமக்கள் தனிநபர் இடைவெளியைக் கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தினர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கடைசி நேரத்தில் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் தனியாக வாக்களித்தனர். 
ஒரு சில சம்பவங்களைத் தவிர்த்து 9 மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குப் பெட்டிகள் மூடி சீலிடப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லபட்டுள்ளன.