தனியார் பஸ் - லாரி நேருக்கு நேர் மோதல்... சம்பவ இடத்திலேயே டிரைவர் பலி... 

தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தனியார் பஸ் - லாரி நேருக்கு நேர் மோதல்... சம்பவ இடத்திலேயே டிரைவர் பலி... 

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உப்பார்பட்டி என்ற இடத்தில் உள்ள நான்குமுனை சந்திப்பில் 183 தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து கம்பம் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தும் சின்னமனூரில் இருந்து தேனி சென்றுகொண்டிருந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

அதிகாலை முதல் தேனி மாவட்டத்தில் மிதமான சாரல் மழை பெய்து வரும் நிலையில் வீரபாண்டி அருகே உள்ள உப்பார்பட்டி நான்குமுனை சந்திப்பில் அமைக்கப்பட்டிருந்த பேரிக்காட்டை முந்தி செல்வதில் ஏற்பட்ட போட்டியால் தனியார் பேருந்து பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

இதில் தனியார் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார் லாரி ஓட்டுனர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பஸ்சில் குறைந்த அளவு பயணிகள் இருந்ததால் இவர்களில் பத்து பேருக்கு மேல் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அதில் ஆறு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக வேகம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் அதிவேகமாக செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அங்கிருந்தவர்கள் கேட்டுக்கொண்டனர்.