காய்ச்சலுக்கு தவறான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை- உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு சிறுமி பலி

பொன்னேரி அருகே தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தகவறான சிகிச்சையால், சிறுமி உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி குமார். இவரது  7 வயது மகள் ரக்ஷிதா கடந்த வாரம் காய்ச்சல் காரணமாக பொன்னேரியில் உள்ள நந்தினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாள்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில், சிறுமிக்கு உடலில் கொப்பளங்கள் வந்துள்ளது. உடல் முழுவதும் கொப்பளங்கள், பரவ, அச்சமடைந்த பெற்றோர்,  சிறுமியை மீண்டும் அதே மருத்துவமனைக்கு, அழைத்து சென்றுள்ளனர். சிறுமியின் நிலைமையைக் கண்ட மருத்தவர்கள், அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறியுள்ளனர்.

இதனால் சென்னைஎழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுமி ரக்ஷிதாவை அனுமதித்துள்ளனர். உடல் முழுவதும் வெந்துபோன நிலையில் இருந்த சிறுமி ரக்ஷிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். சிறுமிக்கு அதிகப்படியான மருந்துகள் அளிக்கப்பட்டதாலேயே உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.